சீனா-ஜப்பான் உறவில் திருப்புமுனை: ‌ஷின்சோ

சீனா-ஜப்பான் உறவில் திருப்புமுனை: ‌ஷின்சோ

2 mins read

பெய்ஜிங்: சீனா வந்துள்ள ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே, சீனாவுடனான இரு தரப்பு உறவில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பு முனை ஏற்பட்டுள்ளது என்று தெரி வித்துள்ளார். ஆசியாவின் இரு பெரிய பொருளியல் நாடுகளுக்கு இடையே புதிய வாய்ப்புகளை எதிர் பார்ப்பதாகவும் அவர் சொன்னார். வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு அபே பேசினார். "புதிய ஜப்பான்-சீனா ஒத்து ழைப்பு உதயமாகியுள்ளது. உள் கட்டமைப்பு, தளவாடங்கள், சுகா தாரப் பராமரிப்பு, நிதி உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்," என்று ஜப் பானிய பிரதமர் சொன்னார்.

அதே நாளில் உறவைப் பலப் படுத்தவும் ஒத்துழைப்பை மேம் படுத்தவும் பலதரப்பட்ட ஒப்பந்தங் களில் சீனாவும் ஜப்பானும் கை யெழுத்திட்டன. இது குறித்துப் பேசிய ஜப்பான் வங்கி, இரு நாடு களும் கையெழுத்திட்டு உள்ள நாணய மாற்று ஏற்பாடு இரு நாடு களின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் என்று கூறியது. இந்த நாணய மாற்று ஏற்பாடு வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. இது, 2021ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாட்டின் மத்திய வங்கிகளுக்கு இடையே இரு நூறு பில்லியன் யுவான் அல்லது 3.4 டிரில்லியன் யென் (யுஎஸ் டாலர் 30 பில்லியன்) வரை உள்ளூர் நாணயத்தை மாற்றிக் கொள்ள வழி செய்கிறது.

வெள்ளிக்கிழமை அன்று முன்னதாக பேசிய சீன பிரதமர் லி கெக்கியாங், ஜப்பானுடன் உறவை முன்னேற்றிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இரு தரப்பு உறவு வழக்கமான நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார். பெய்ஜிங் சொந்தம் கொண்டாடும் பிரச்சினைக்குரிய தீவை 2012ல் ஜப்பான் தேசியமய மாக்கியபோது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந் தது. ஆனால் ஆசியாவின் இரு பெரும் பொருளியல் நாடுகளான சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே அண்மைய காலமாக உறவு சீரடைந்து வருகிறது.