இலங்கையில் பிரதமர் யார் என்ற குழப்பம் கடந்த பத்து நாட்களாக நீடித்து வரும் நிலையில் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் நம் பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பிரதமர் பதவியிலிருந்து அதி- பர் மைத்திரிபால சிறிசேனவால் நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தான்தான் பிரதமராக நீடிப்பதாகக் கூறி பதவியிலிருந்து இறங்க மறுத்து வருகிறார். இந்நிலையில் அதிபரால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே புதிது புதிதாக அமைச்- சர்களை நியமிப்பதோடு நாட்டு மக்களுக்கான செயல்திட்டங்- களையும் அறிவித்து பிரத மராகச் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் யார் தனிப்பெரும்பான்மை பலம் பொருந்திய பிரதமர் என்பது இன்னும் நிரூபிக்கப்பட வில்லை.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் விக் ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட் சிக்கு 104 உறுப்பினர்களும் ராஜ பக்சே ஆதரவுக் கட்சிகளுக்கு 99 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த இருவருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாததால் அதி காரபூர்வ அரசாங்கத்தை ஏற்ப டுத்த பதினாறு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் ஆதரவு இருவருக்குமே தேவைப்படுகிறது. அதனால் அந்தக் கூட்டமைப் பின் முடிவை இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகளவில் அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர் பார்த்தனர். யாரை ஆதரிக்கலாம் என்று அந்தக் கூட்டமைப்பு ஒரு வார காலம் ஆலோசனை நடத்திய பின்னர் நேற்று முன்தினம் மாலை தனது முடிவை அறிவித்தது.

