வாஷிங்டன்: இந்தோனீசியாவில் விபத்துக்குள்ளான 'லயன் ஏர்' விமானம் கீழ் நோக்கி மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கடலுக்குள் பாய்ந்திருக்கலாம் என்று மூன்று நிபுணர்கள் தகவல் களை அடிப்படையாக வைத்து மதிப்பிட்டுள்ளனர். 'ஃபிளைட் ரேடார்24' நிறுவனம் பதிவு செய்த தகவல்களை ஆய்வு செய்த அவர்கள், "விமானத்தின் மூக்குப்பகுதி 45 டிகிரி கோணத்தில் கீழ் நோக்கியிருந்தது," என்று தெரிவித்தனர்.
விமானத்தின் வேகத்தை கடலிலிருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியின் தகவல்களை ஆய்வு செய்தால் உறுதி செய்துவிடலாம். ஆனால் இன்னமும் அந்த கறுப்புப்பெட்டி ஆய்வு செய்யப்பட வில்லை. விமானத்தின் வேகம், பாதையைப் பற்றி இந்தோனீசிய அதிகாரிகளும் குறிப்பிடும்படி எந்தவிதத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்து பாது காப்புக் கழகத்தின் முன்னாள் விசார ணையாளர் ஸ்காட் டன்ஹாம், விமானம் செங்குத் தாகவும் கிடை மட்டத்திலும் பறந்த தூரத்தைக் கணக்கிட்டு வேகத்தைக் கணித்து கூறியுள் ளார்.

