ஷாங்காய்: அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி வர்த்தக பூசலுக்குத் தீர்வு காணத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. இருப்பினும் பரஸ்பர மரியாதையுடன் பேச்சு நடைபெற வேண்டும் என்று சீனா வலி யுறுத்தியுள்ளது. சீனாவின் உதவி வர்த்தக அமைச்சர் வாங் பிங்னான் இதனை தெரிவித்தார். சீனா-அமெரிக்க உறவை கூட்டாக மேம்படுத்த பெய்ஜிங் விரும்புகிறது என்று செய்தி யாளர்களிடம் பேசிய திரு வாங் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விருப்பம் தெரி வித்திருந்தார். இரு நாடுகளுக்கு இடை யிலான வேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று திரு டிரம்ப் கூறியிருந்தாலும் சீனாவின் பொருட்களுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என்று எச்சரித் தார்.
சீனா: அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்
1 mins read

