யோகா நிலையத்தில் இருவர் சுட்டுக் கொலை

யோகா நிலையத்தில் இருவர் சுட்டுக் கொலை

1 mins read

புளோரிடா: புளோரிடாவில் உள்ள யோகா நிலையத்தில் ஒருவன் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் இரண்டு பேர் மாண் டனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர். வெள்ளிக்கிழமை மாலை கடைத் தொகுதியில் உள்ள யோகா நிலையத்தில் நுழைந்து அவன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு அவன் இறந்தான் என்று போலிசார் தெரிவித்தனர். துப்பாக்கிக்காரன் 40 வயது ஸ்காட்பால் பெயர்லே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.