ஹாங்காங் போலிசாரை கத்தியால் மிரட்டிய நபர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

ஹாங்காங் போலிசாரை கத்தியால் மிரட்டிய நபர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

1 mins read
abad7551-4eb2-4c87-b626-e4ddc2157d7d
-

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள சுரங்க ரயில் நிலையத் தில் போலிஸ் அதிகாரிகளை கத்தியால் மிரட்டிய நபரை போலிசார் சுட்டதில் அவர் காயம் அடைந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஷாம் ‌ஷுய் போ ரயில் நிலையத்தில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட போலிசார், சந்தேக நபர் ஒருவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த நபர் அவரது பையில் வைத்திருந்த 15 செ.மீ. நீளமுள்ள கத்தியை எடுத்து போலிஸ் அதிகாரிகளை மிரட் டியதாக அந்த அதிகாரி கூறி னார். போலிசார் சுட்டதில் காயமுற்ற அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கத்தியால் மிரட்டிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்தை போலிசார் சுற்றி வளைத்துள்ளனர். படம்: ஏஎஃப்பி