அமெரிக்க அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி ஜெஃப் செஷன்ஸ், (படம்) அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வேண்டு- கோளுக்கு இணங்கப் பதவி விலகியுள்ளார். இது தொடர்பாக திரு டிரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், திரு செஷன் ஸின் பங்களிப்புக்கு தமது நன் றியைத் தெரிவித்துக் கொண்டார். ''தலைமைச் சட்ட அதிகாரி ஜெஃப் செஷன்ஸின் எதிர்காலத்- துக்கு எங்களது மனமார்ந்த வாழ்த் துகள்,'' என்று திரு டிரம்ப் பதி விட்டார். 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலை- யிட்டதாகக் கூறப்படும் குற்றச் சாட்டுகள் குறித்த சிறப்பு விசா ர ணையில் இருந்து திரு செஷன்ஸ் தம்மை விடுவித்துக் கொண்ட பிறகு அவரை திரு டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகினேன்: ஜெஃப் செஷன்ஸ் விளக்கம்
1 mins read

