ஜெஃப் செஷன்ஸ் பதவி விலகல்; விசாரணைக்குக் கோரிக்கை

ஜெஃப் செஷன்ஸ் பதவி விலகல்; விசாரணைக்குக் கோரிக்கை

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பிலிருந்து ஜெஃப் செஷன்ஸ் பதவி விலகிய விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று பிரதிநிதிகள் சபையில் புதிய பலம் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திரு ஜெஃப் செஷன்ஸ் நேற்று முன்தினம் பதவி விலகியதைத் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் புயல் வீசியது. அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகுவதாகவும் திரு ஜெஃப் செஷன்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் பதவி விலகியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ள ஜனநாயகக் கட்சியினர், 2016ல் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டது பற்றிய விசாரணையைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.