ஜோர்தானில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

ஜோர்தானில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

1 mins read
8e14ca5b-3368-4cc6-a35f-6600c0029e6a
-

ஜோர்தானில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். பாலைவன நகரமான பெட்ரா நகரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 4,000 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். காணாமற்போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் நால்வர் பத்திரமாக உள்ளனர் என்று அரசாங்கப் பேச்சாளர் அறிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி