பாரிஸ்: முதலாம் உலகப் போர் முடிவுற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவுகூரும் வகையில் நேற்று உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக் கும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்கிய நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புட்டின் உட்பட பல நாடுகளின் உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 1914ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய முதலாம் உலகப் போர் 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நீடித்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இப்போரில் 9.7 மில்லியன் வீரர்களும் மக்களில் 10 மில்லியன் பேரும் உயிரிழந்தனர். இதற்கிடையே பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து ஆகிய நாடுகளிலும் முதலாம் உலகப் போர் நிறுத்தத் தின் 100வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலாம் உலகப் போர் நிறுத்தம்: பாரிசில் ஒன்றுகூடிய தலைவர்கள்
1 mins read
-

