லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வேகமாகப் பரவும் காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடும் நிலையில் தீக்கு அஞ்சி சுமார் 250,000 பேர் வலுக்கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியில் உள்ள பேரடைஸ் நகருக்கு அருகே 14 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து காட்டுத் தீக்கு 25 பேர் பலியானதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி யுள்ளனர். பேரடைஸ் நகரில் மட்டும் இதுவரை 19 பேர் காட்டுத் தீக்கு பலியானதாகக் கூறப் படுகிறது.
இங்கு குடியிருப்பு வீடுகள் உட்பட சுமார் 6,700 கட்டடங்கள் தீயில் நாசமாகின. மலிபு கடற்கரை பகுதியிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் குண்டுகள் வீசப்பட்டு வரு கின்றன. இருப்பினும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அப்பகுதியில் வீசும் பலத்த காற்று தங்கள் பணிக்கு இடையூறாக உள்ளது என்றும் தீயணைப்பாளர்கள் கூறு கின்றனர். பெரிய அளவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயின் பாதிப்பிலிருந்து தப்ப பல நகரங்களிலிருந்து குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

