கோலாலம்பூர்: இந்திய சமூகம் பின்தங்கிய நிலையில் இருக்க விடப்பட மாட்டார்கள் எனத் துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார். இந்தியர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வளிக்கும் சமூகச் சீர்திருத்த செயல் திட்டங்களை அமல்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்றும் எனவே, தேசிய மேம்பாட்டிலிருந்து எந்தவொரு தனிநபரும் விடுபட முடியாது என்றும் அவர் சொன்னார். தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சீர்திருத்த திட்டங்களை அமுல்படுத்துவது முக்கியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகக் கூறினார்.
வான் அசிஸா: இந்திய சமூகம் பின்தங்கியிருக்க விடமாட்டோம்
1 mins read

