குவைத்தில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

குவைத்தில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

1 mins read
168c1cc5-4b5f-42aa-8a5c-df8799fd6c31
-

குவைத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கார்கள், லாரிகள் உட்பட பல வாகனங்கள் வெள்ளநீரில் சிக்கிக்கொண்டன. மழை நீர் வடிய போதிய கால்வாய் வசதி இல்லாததால் குவைத்தில் வெள்ளப்பெருக்கு மோசமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹுசம் அல் ரூமி நேற்று பதவி விலகியுள்ளார். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவ வீரர்களும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படம்: இபிஏ