தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பள்ளியில் கத்திக்குத்து; இருவருக்கு வெட்டு; ஒருவர் மரணம்

1 mins read
ca6d7e93-a997-474f-908e-1d4a289ce5f7
-

ஜோகூர்: ஜோகூர் பள்ளி விழாவில் இரு ரகசிய குண்டர் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். மற்றொருவர் கத்திக்குத்து காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவத்தில் 21 வயது இளைய ரின் வலதுபக்க மார்பில் கத்திக் குத்து விழுந்தது. ரத்தம் வழிந்த நிலையில் பள்ளியின் முன்பக்க வாயிலை அவர் நெருங்கினார். ஆனால் மயங்கி விழுந்து அவர் மரணமடைந்தார்.

மற்றொரு 15 வயது இளையர் கத்திக்குத்து காயங்களுடன் சுல்தானா அமினா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஸ்கூடாய் எஸ்ஜேகேசி குவோ குவாங் பள்ளி யில் அறப்பணி விற்பனை விழா நடைபெற்றபோது இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் முஹமட் தாயிப் அஹமட் சொன் னார். "பள்ளி விழாவில் கலந்துகொள் வதற்காக 21 வயது இளையரும் அவரது 15 வயது நண்பரும் மற்ற மூன்று நண்பர்களுடன் நுழைந்த போது எட்டுப் பேர் கொண்ட கும்பல் அவர்களை எதிர்கொண் டது. பின்னர் இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் சண்டையில் ஈடுபட் டனர்," என்றார் அவர்.

இரு குண்டர் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. படம்: யூடியூப் காணொளி