இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று உறுப்பினர்கள் அடிதடியில் இறங்கினர். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசினர். யார் யாரை அடித்தார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் பலருக்குக் காயம் ஏற்பட்டு விட்டது. என்றாலும் கடுமையான காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இதனிடையே, மன்ற நாயகர் மன்றத்தை ஒத்திவைத்துவிட்டார். ராஜபக்சே கட்சி யைச் சேர்ந்த உறுப்பினர், நாயகரின் ஒலிப் பெருக்கிச் சாதனத்தைப் பிடுங்கி எறிய முயன்று அந்த முயற்சியில் அந்த உறுப் பினரே காயம் அடைந்துவிட்டார்.
அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட் டது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை மூன்று வாரங்களுக்கு முன் பதவியிலிருந்து அகற்றிவிட்டு ராஜ பக்சேவை அக்டோபர் 26ஆம் தேதி பிரதம ராக அதிபர் சிறிசேன நியமித்தார். ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்க முடியாமல் போனதால் மன்றத்தையே கலைத்து ஜன வரியில் தேர்தலை அறிவித்தார் அதிபர். இருந்தாலும் அந்த முடிவை நீதிமன்றம் நிறுத்திவைத்துவிட்டது. இந்நிலையில் புதன்கிழமை மன்றம் கூடியபோது ராஜபக் சேவுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்றம் நேற்று வழக்கமாக மீண்டும் கூடியது. ''இலங்கையில் இப் போது பிரதமரும் இல்லை. அமைச்சரவை யும் இல்லை," என்று மன்ற நாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.
இதனிடையே, நேற்று மன்றத்தில் பேசிய ராஜபக்சே, தேர்தலை நடத்துவது ஒன்றே இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வுகாண வழி என்று தெரிவித்தார். அதை ரணில் தரப்பினர் எதிர்த்து மசோதா ஒன்றை வாக்கெடுப்புக்குத் தாக் கல் செய்தனர். அதை ராஜபக்சே மற்றும் அதிபர் சிறிசேன தரப்பு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். அந்தச் சூழலில் உறுப்பினர்கள் அடிதடியில் இறங்கினர். இலங்கையில் அரசமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு அன்றாட நிர்வாகப் பணிகள் முடங்கிப்போய் கிடக்கின்றன.
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் தரப்பு உறுப்பினர்களும் ராஜபக்சே மற்றும் சிறிசேன தரப்பு உறுப்பினர்களும் நேற்று ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர். இலங்கையில் இப்போது பிரதமரும் இல்லை, அமைச்சரவையும் இல்லை என்று கூறி மன்றத்தை நாயகர் ஒத்திவைத்துவிட்டார். படம்: இபிஏ

