காக்ஸ் பசார்(பங்ளாதேஷ்): மியன்மாரிலிருந்து தப்பி அண்டை நாடான பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பவில்லை என்று பங்ளாதேஷ் அகதிகளுக்கான ஆணையர் தெரிவித்தார். இதனால் பங்ளாதேஷ் நாட்டிலிருந்து முதல் கட்டமாக 150 பேரை திருப்பி அனுப்பும் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆனால் அகதிகளை ரோஹிங்யா திருப்பியனுப்பினால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஐநா ஏற்கெனவே எச்சரித்திருந்தது.
"ரோஹிங்யா மக்கள் மியன்மார் திரும்ப விரும்பவில்லை"
1 mins read

