போயிங் நிறுவனத்தை எதிர்நோக்கும் கேள்விகள்

1 mins read

வா‌ஷிங்டன்: இந்தோனீசியாவில் சென்ற மாதம் நிகழ்ந்த 'லயன் ஏர்' விமான விபத்தின் தொடர்பில் போயிங் நிறுவனம் பல்வேறு கேள்விகளை எதிர்நோக்கி வருகிறது. விபத்துக்குள்ளான விமானத்தை நிறுத்துவதற்கு எதிரான முறையில் உள்ள மாற்றங்கள் குறித்து 'போயிங்' பதில் அளிக்க தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுவே விமான விபத்துக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படு கிறது. அக்டோபர் 29ஆம் தேதி 'லயன் ஏர்' நிறுவனத்துக்குச் சொந்தமான 'போயிங் 737-மேக்ஸ்' ரக விமானம் ஜாவா கடலில் நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 189 பேரும் மாண்டனர்.