மலேசியாவில் சந்தேகப் பேர்வழிகள் 8 பேர் கைது

3 mins read

கோலாலம்பூர்: தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் மலேசி யாவின் பயங்கரவாதத் தடுப்புப் போலிசார் 8 பேரைக் கைது செய்துள் ளனர். அவர்களில் 7 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மலேசியர். பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த அனைவரும் அபுசயேஃப் தீவிரவாத இயக்கத்துடன் தொடர் புடை யவர்கள் என்றும் அவர்கள் மலேசியாவின் சாபா கடற்பகுதி யில் மக்களைக் கடத்தும் சம்ப வங் களை அரங்கேற்றத் திட்ட மிட் டிருந்ததாகவும் கூறப்படுகி றது. கைதுசெய்யப்பட்டவர்களில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் அபுசயேஃப் இயக்கத்தில் தளபதியாகப் பணியாற்றியவர் என்றும் அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள், ஃபுருஸி இன்டமா, முகமது ஃபுஜி ஆகி யோருக்கு வலதுகரமாகச் செயல் பட்டவர் என்று சாபா மாநில போலிஸ் தலைவர் முகமது ஃபுஸி ஹருண் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள் ளார்.

இம்மாதம் 10ஆம் தேதி தீவிர வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போலிஸின் அதிரடிச் சோதனையின் போது சாபாவின் மேற்குப் பகுதியில் கினாருட் நக ரில் அந்த ஆடவர் கைது செய் யப்பட்டார். தீவிரவாத இயக்கத்தில் குழந் தைகளைச் சேர்த்து அவர் களை அரசாங்கத்திற்கு எதிராக மனிதக் கேடயங்களாகப் பயன்படுத் து வதற்கும் அவர்கள் திட்ட மிட்டிருந் தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் மலேசி யாவின் புத்ரஜெயா, சாபா ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் இந்த மாதம் 12ஆம் தேதிக்குள் கைதானார்கள் என்று மலேசியப் போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கை து செ ய் ய ப் ப ட் ட வ ர் க ளி ல் ஒருவர் அபுசயேஃப் இயக்கத் திற்கு ஆயுதம் தயாரிப்பவர் என் றும் அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டது. கைதானவர்களில் இருவர் தங் கள் இயக் கத்தில் சிறுவர்களைச் சேர்த்து, அவர்களை அரசாங்கத் திற்கு எதிராக மனிதக் கேடயங் களாகப் பயன்படுத்தத் திட்டமிட் டிருந் தனர்.

முதன்முதலில் அக் டோபர் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 38 வயது மலேசியர் சிரியாவில் செயல் பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் குழு வில் இணைந்து பயங்கர வாதத்தில் ஈடுபட்டுவரும் மலேசி யரான அகெல் சைனல் என்ப வருக்கு அனுப்புவ தற்கு நிதி திரட்டி அனுப்பும் முயற்சியில் ஈடு பட்டிருந்தபோது கைது செய்யப் பட்டார். மலேசியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வெளி வரும் கட்டுரைகளைப் படித்து விட்டு பயங்கரவாதக் குழுக்களின் அனுதாபிகளாக மாறி, தென்கிழக் காசியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி திரட்டும் போக்கு மலேசியாவுக்கு பெரும் மிரட்டலாக இருந்து வரு கிறது என்று கூறப்படுகிறது.

மலேசியாவில் கடைசியாக 2016ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சிலாங்கூரில் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.