யங்கூன்: மியன்மார் குடிநுழைவு அதிகாரிகள் நூற்றுக்கும் மேலான ரோஹிங்யாக்கள் வந்த படகு ஒன்றைத் தடுத்து வைத்துள்ளனர். நேற்று அதிகாலை மியன் மாருக்குத் தெற்கில் 30 கி.மீ. தொலைவில் 106 பேருடன் வந்த படகு ஒன்றை அந்நாட்டு குடி நுழைவு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யாக் கள் குறித்து புலன்விசாரணை மேற்கொள்ள போலிசார் வரவுள்ள தாக குடிநுழைவு அதிகாரி கியாவ் ஹ்தே என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் ராகின் பகுதியைச் சேர்ந்த வங்காளிகளாக இருக்கக்கூடும் என்றும் அந்த அதிகாரி கூறினார். அப்படகில் 50 ஆண்கள், 31 பெண்கள், 25 குழந்தைகள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. பங்ளாதேஷில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்றும் அவர் கூறினார். ரோஹிங்யாக்களை மியன்மார் அரசாங்கம் சிறுபான்மை இனத்த வராகக் கருதுவதில்லை. மாறாக அவர்களை சட்டவிரோதக் குடி யேறிகளாகவே கருதுகிறது.
மியன்மாரின் ராகின் மாநிலத் தில் கடந்த ஆண்டு நடந்த ராணுவத்தின் கெடுபிடிக்கு அஞ்சி அங்கிருந்து 700,000க்கும் மேலான ரோஹிங்யாக்கள் மியன்மா ரை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா அமைப்புகள் கூறி வருகின் றன. ராணுவத்தினரால் பலர் படுகொலை செய்யப்பட்டு நூற்றுக் கணக்கான கிராமங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ரோஹிங்யா பெண்கள் கும்பலாக சீரழிக்கப்பட்டனர் என்று ஐநா மியன்மார் மீது குற்றம் சுமத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மியன்மார் மறுத்து வருகிறது.

