ஹாங்காங்: சீனாவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் சுகாதாரமற்ற முறையிலான நடவடிக்கை குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. அந்த ஹோட்டலில் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தப் படுத்தப் பயன்படுத்தும் அதே பஞ்சால் காப்பிக் கிண்ணங் களைத் துடைத்து வைக்கும் காட்சி, அறையில் தங்கும் விருந் தினருக்கான துண்டால் கழிவறையைச் சுத்தம் செய்யும் காட்சிகள் அக்காணொளியில் இடம்பெற்றுள்ளன. உலகப் புகழ்பெற்ற ஷங்ரிலா ஏஷியா லிமிட், ஹில்டன் வோர்ல்ட்வைட் ஹோல்டிங்ஸ் இன்க் ஆகிய நிறுவனங்களால் நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள் ளது. அதற்காக அந்நிறுவனங்கள் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. தூய்மைக் கேட்டை சுட்டிக்காட்டும் அந்தக் காணொளியை 29 மில்லியன் பேருக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.
சீனா: நட்சத்திர ஓட்டலில் தூய்மைக்கேடு
1 mins read

