பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் விக்ரமசிங்கேவுக்குப் பெரும் பான்மை பலம் இருக்கும் நிலையில் திடீரென அவரை பிரதமர் பதவியி லிருந்து விலக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அப்பதவி யில் அமர்த்த அதிபர் சிறிசேன மேற் கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. விக்ரமசிங்கே நீக்கப்பட்டு இன் றுடன் ஒரு மாதமாகிறது. அரசியல் குழப்பம் தொடர்பில் தலைநகர் கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் நேற்று பேசியபோது அதிபர் சிறிசேன உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண் ணீர் வடித்தார். "விக்ரமசிங்கே பெருத்த ஊழல் வாதி," என்று அப்போது அவர் குறிப்பிட்டார். "ஐக்கிய தேசிய கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தபோதிலும் ரணில் விக்ரமசிங்கேவை என் முன்னால் கொண்டுவரக்கூடாது என்று அக்கட்சியினரிடம் கூறி யிருக்கிறேன். "அவரை ஒருபோதும் பிரதமர் ஆக விடமாட்டேன்," என்றார் அதிபர் சிறிசேன.
சிறிசேன உறுதி: விக்ரமசிங்கேவை பிரதமர் ஆகவிடமாட்டேன்
1 mins read
-

