உலகின் மரபணு மாற்றப்பட்ட முதல் குழந்தைகள்

உலகின் மரபணு மாற்றப்பட்ட முதல் குழந்தைகள்

1 mins read

ஹாங்காங்: உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட குழந்தைகளை உருவாக்கி யிருப்பதாக சீனாவைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய மரபணு மாற்று ஆய்வில் இது புதிய சாதனை என்று அறிவியல் உலகில் கூறப்படுகிறது. சீனாவின் பல்கலைக்கழக பேராசிரியரான ஹி ஜியாங்கூய் வெளியிட்டுள்ள யூடியூப் காணொளியில் சில வாரங்களுக்கு முன்பு பிறந்த இரட்டை பெண் குழந்தை களுக்கு 'எச்ஐவி' கிருமி தொற்றுவதைத் தடுக்கும் வகையில் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த அந்தப் பேராசிரியர் சீனாவின் தென் நகரமான ஷென்ஷெனில் உள்ள சோதனைச் சாலையில் பணியாற்றி வருகிறார். 'CRISPR' எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபணுவில் மாற்றம் செய்ததாகவும் அவர் கூறினார். 'CRISPR' முறையில் துல்லியமாக மரபணுக்களை மாற்றவோ அகற்றவோ முடியும்.