மெக்சிகோ: அமெரிக்காவின் எல்லையோரக் காவலையும் மீறி வேலியை உடைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்த அகதிகளை நாடு கடத்த மெக்சிகோ முடிவு செய் துள்ளது. அமெரிக்காவுக்குள் 500க்கும் மேற்பட்ட அகதிகள் பல வந்தமாக நுழைய முயற்சி செய்த னர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று டிஜு வானா, சான் டியகோ நகரங் களுக்கு இடையிலான எல்லை யைத் தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைய அகதிகள் முயற்சி செய்தனர்.
அப்போது அவர்களை நோக்கி அமெரிக்க எல்லையோரக் காவல் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து அகதிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். கூச்சலும் குழப்பமும் ஏற்பட்ட நிலையில் பதற்றம் அதிகரித்தது. கண்ணீர்ப் புகையில் சிக்கிய குழந்தைகள் அலறியபடி, இருமலுடன் ஓடியதாக ஏபி செய்தி நிறுவனத்தின் செய் தியாளர் ஒருவர் கூறினார். வேலியில் இருந்த இடை வெளியைப் பிரிக்க அகதிகள் முயற்சி செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் சொன்னார். மெக்சிகோவின் மிலனியோ தொலைக்காட்சி காட்டிய காட்சி யில் சிலர் வேலியைத் தாண்டி குதிக்க முயற்சி செய்வதையும் காண முடிந்தது.
அமெரிக்க எல்லையை நோக்கி ஓடிய அகதிகள். படம்: ராய்ட்டர்ஸ்

