வாஷிங்டன்: பிரெக்ஸிட் ஒப்பந்தம் அமெரிக்கா, பிரிட்டன் இடை யிலான வர்த்தக ஒப்பந்தத்தை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் திரேசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் வரைவு ஐரோப்பிய ஒன்றியத் துக்கே அதிக பலனளிப்பதைப் போன்று உள்ளது என்று கூறிய திரு டிரம்ப், அதன் காரணமாக அமெரிக்காவுடன் பிரிட்டன் வர்த் தகம் மேற்கொள்ள முடியாமல் போகலாம் என்றார். இருப்பினும் அவரது இந்தக் கூற்றை திரேசா மே மறுத்தார். பிரெக்ஸிட் ஒப்பந்தம் தெளி வாக உள்ளதாகவும் உலக நாடு களுடன் பிரிட்டன் வர்த்தகம் மேற்கொள்வதில் எவ்வித பிரச் சினையும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளி யேறுவதற்கு கடந்த ஞாயிற் றுக்கிழமை அளிக்கப்பட்ட ஒப்பு தல், பிரிட்டன் அனைத்து நாடு களுடனும் ஒப்பந்தம் மேற்கொள் வதற்கு வழிவகை செய்கிறது என பிரிட்டன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித் துள்ளார்.
அதிபர் டிரம்ப்: அமெரிக்க=பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடும்
1 mins read

