வன்முறை தமிழ் திரைப்படக் காட்சிபோல நிகழ்ந்தது: ஆலய தலைமை அர்ச்சகர் விளக்கம்

2 mins read
5cb75162-3ff6-4809-9643-8a72cff88b30
-

சுபாங் ஜெயா: கோயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் தமிழ்த் திரைப் படத்தில் வருவதுபோல இருந்தது என்று சீஃபீல்ட் ஸ்ரீமகா மாரியம் மன் ஆலய தலைமை அர்ச்சகர் தெரிவித்தார். முகத்திரையுடன் புகுந்த வன் முறையாளர்கள் தம்மையும் ஆல யத்தின் மூத்த தலைவர்களையும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட் டியதாக டாக்டர் ஜெயகுமார் சுப்பி ரமணியம் என்னும் அந்த அர்ச் சகர் கூறினார். "ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தின் மேம்பாட்டாளர் வந்து கொண்டு இருப்பதாகவும் இத்தக வல் கூட்டரசின் ஆயுதப் படை பிரிவினர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு தெரிவிக்கப்பட்டு இருப் பதாகவும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் எங்களிடம் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். "இரவு முழுவதும் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தோம்.

பின்னிரவு 2.15 மணியளவில் சுமார் நூறு பேர் அடங்கிய கும்பல் ஒன்று திடீரென்று ஆலயத்தினுள் நுழைந்தது. அவர்களில் சிலர் தங்களது முகத்தை மறைத்திருந் தனர். "ஆலயத்தின் இரும்புக் கதவு களை அவர்கள் தகர்க்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் எல்லாக் கதவுகளையும் மூடிய பின்னர் பக்தர்களைத் தாக்கி உதைத்தனர். பெண்களும் இளம் சிறார்களும் கூட தாக்கப்பட்டனர்," என்று திரு ஜெயகுமார் கூறினார். மற்ற சம்பவங்களை ஆலயத் தின் பேச்சாளர் இளங்கோவன் அண்ணாமலை விளக்கினார்.

"ஆலயத்தைத் தாக்கிய கும் பல், ஆலயத் தலைவரையும் நிர் வாகக் குழு உறுப்பினர் சிலரையும் பிணை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டியது. ‚"நிலம் மேம்பாட்டாளருக்குச் சொந்தமானது. அதிலிருந்து வெளியேறு என்றும் சத்தமிட்டனர். ‚"ஐந்து ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர்களை பிணைபிடித்து வைத்துக்கொண்டார்கள், அவர் களில் ஆலயத் தலைவர் ராமாஜி யும் ஒருவர். அவர் கழுத்தில் வெட்டுக்கத்தியை (பாராங்) வைத்து மிரட்டினர்," என்றார் திரு இளங்கோவன்.

தலைமை அர்ச்சகர் டாக்டர் ஜெயகுமார் சுப்பிரமணியம். படம்: மலேசிய -ஊடகம்