பெட்டாலிங் ஜெயா: கும்பலால் தாக்கப்பட்ட தீயணைப்பு வீரர் மரணமடைந்ததாக கிளம்பிய தக வலை மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை மறுத்துள்ளது. சுபாங் ஜெயாவிலுள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் தொடர்பான சம்பவத்தில் முகம்மது ஆதிப் முகம்மது காசிம், 24, என்னும் தீயணைப்பு அதிகாரி படுகாய மடைந்தார். அவசர மருத்துவ வாகனத்தில் இருந்த அவரை கலவரக்காரர்கள் பலவந்தமாக வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கியதாக அதிகாரிகள் தெரி வித்தனர். அத்தாக்குதலில் அந்த இளையரின் விலா எலும்புகளிலும் உள்ளுறுப்புகளிலும் காயங்கள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று அவர், சுபாங் ஜெயா மருத்துவ நிலையத்தில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். தீயணைப்புத் துறையின் அதி காரத்துவ ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து விளக்கப்பட்டது.
திரு முகம்மது ஆதிப் மரணமடைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் புரளி கிளப்பிவிடப்பட்டதாகவும் சுபாங் ஜெயா மருத்துவ நிலை யத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுவருவதாகவும் அந்த ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற வதந்திகளைக் கிளப்பிவிட வேண்டாம் என பொது மக்களை தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டது. மருத்துவ நிலையத்துக்கு வெளியே அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கவலையுடன் காத் திருந்தனர். திரு முகம்மது ஆதிப் புக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் கார் ஒன்று எரிக்கப்பட்டதால் தீய ணைப்புப் படை அனுப்பிவைக்கப் பட்டது.

