சீனா சென்றிருந்த புகைப்படக்காரர் மாயம்; மனைவி புகார்

சீனா சென்றிருந்த புகைப்படக்காரர் மாயம்; மனைவி புகார்

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் ஸின்ஜியாங் வட்டாரத்திற்குச் சென்றிருந்த தன் கணவரைக் காணவில்லை என்று அவரின் மனைவி கூறியுள்ளார். சிறந்த புகைப்படத்திற்கான விருது பெற்ற சீனாவைச் சேர்ந்த லு குவாங் நியூயார்க்கில் வசித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஓர் உரை நிகழ்த்துவதற்காக ஸின்ஜியாங் வட்டாரத்திற்கு" சென்றிருந்த தன் கணவருடன் நவம்பர் 3ஆம் தேதிக்குப் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் மனைவி பிபிசியிடம் கூறியுள்ளார். சீனாவில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தன் கணவரை அழைத்துச் சென்றிருப்பதாக தனக்கு பின்னர் தெரியவந்ததாக அந்த மாது கூறினார்.