வாஷிங்டன்: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடல்பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி-20 மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புட்டினை சந்திப்பதை தான் ரத்து செய்யக்கூடும் என்று கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை ரஷ்ய கப்பல்கள் தாக்கியது குறித்த முழு தகவல் அறிக்கைக்காக தான் காத்திருப்பதாக திரு டிரம்ப், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 30ஆம் தேதி அர்ஜெண்டினாவில் நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டின்போது திரு டிரம்ப்பும் திரு புட்டினும் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. இந்நிலையில் உக்ரேனை ஆதரிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யா மீது கடும் தடைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஹீதர் தெரிவித்துள்ளார்.
உக்ரேன்-ரஷ்யா மோதலால் புட்டினை சந்திப்பதை டிரம்ப் ரத்து செய்யலாம்
1 mins read

