கறுப்புப் பெட்டி தகவல்: விபத்தை தவிர்க்க போராடிய விமானிகள்

கறுப்புப் பெட்டி தகவல்: விபத்தை தவிர்க்க போராடிய விமானிகள்

1 mins read

ஜகார்த்தா: ஜாவா கடற்பகுதியில் சென்ற மாதம் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விமானிகள் போராடியதாக கறுப்புப் பெட்டி தகவல் உணர்த்துவதாக விசாரணைக் குழுவினரின் ஆரம்ப கட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சென்ற மாதம் போயிங் 737 ரக விமானம் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த 11 நிமிட பயணத்தின்போது தானியக்க பாதுகாப்புக் கருவி செயலிழந்ததால் விமானத்தின் முன் பகுதி (மூக்குப் பகுதி) பல தடவை கீழ்நோக்கிச் சென்றதாகவும் ஆனால் விமானிகள் சிரமப்பட்டு அந்த விமானத்தை உயரத்தில் பறக்கச் செய்ததாகவும் கறுப்புப் பெட்டி தகவல் கூறுகிறது. அந்த விமானத்தில் சென்ற 189 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் லயன் ஏர் நிறுவனம் அதன் விமானங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்று இந்தோனீசிய பாதுகாப்பு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.