ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; மூவர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; மூவர் பலி

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க் கிழமை குண்டு வெடித்ததில் அமெரிக்க வீரர்கள் மூவர் கொல்லப்பட்டதாக நேட்டோ படையினர் தெரிவித்துள்ளனர். அந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளி களின் தாக்குதல்கள் தற்போது அதிகரித் துள்ளன. தலிபான் குழுவினர் ஒரு பக்கம் அரசாங்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தாக்குதல்களை அவர்கள் நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகளும் அங்குள்ள அமெரிக்க கூட்டணிப் படைகளும் தலிபான் போராளி களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.