அதிபர் டிரம்ப்புக்கு எதிராக செனட்டர்கள் போர்க்கொடி

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக செனட்டர்கள் போர்க்கொடி

1 mins read

வா‌ஷிங்டன்: ஏமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைக்கு வழங்கப் பட்டு வரும் ராணுவ ஆதரவை நிறுத்தக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும் பாலான செனட்டர்கள் வாக்களித்துள்ளது அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பி யோவும் தற்காப்பு அமைச்சர் ஜிம் மேட்டிசும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அமெரிக்காவின் ராணுவ ஆதரவை மீட்டுக் கொண்டால் ஏமனில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

ஆனால் அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்த செனட்டர்கள், 63-37 எனும் வாக்கு எண்ணிக்கையில் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்தனர். பத்திரிகையாளர் காஷோகி கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் பிரபல எழுத்தாளரான காஷோகி கொல்லப் பட்டதால் சவூதி அரேபியா கடுமையான குறைகூறலுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ராணுவ ஆதரவுக்கு எதிராக செனட்டர்கள் வாக் களித்துள்ளனர்.