அதிபர் புட்டின்: சட்டப்படியே கப்பலை பறிமுதல் செய்தோம்

அதிபர் புட்டின்: சட்டப்படியே கப்பலை பறிமுதல் செய்தோம்

1 mins read
060b23cf-94f7-4d74-b7e0-3fd30cc5ee3a
-

மாஸ்கோ: உக்ரேனின் மூன்று கப்பல்கள் பறிமுதல் செய்யப் பட்டதைத் தற்காத்து பேசியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், "சட்டப்படிதான் ரஷ்ய ராணுவம் நடந்துள்ளது," என்றார். அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா செயல்பட்டுள்ளது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ள வேளையில் ரஷ்ய அதிபரின் கருத்து வெளியாகியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரேன் கப்பலை ரஷ்யா பறி முதல் செய்ததால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. இதற்கு நேற்று வரை ரஷ்யா விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் இதன் தொடர் பில் முதல் முறையாக பேசியுள்ள அதிபர் புட்டின், ஆத்திரமூட்டும் வகையில் கியவ் நடந்து கொண் டதாகக் கூறினார்.

"ரஷ்யாவின் நீரிணைப் பகுதி யில் அத்துமீறி நுழைந்ததோடு மட்டுமல்லாமல் ரஷ்ய ரோந்துப் படகுகளின் உத்தரவையும் மீறி நிறுத்தாமல் சென்றதால் உக் ரேன் கப்பல்கள் பறிமுதல் செய் யப்பட்டன," என்று திரு புட்டின் சொன்னார். இந்த விவகாரத்தில் ரஷ்ய படைகள் என்ன செய்ய வேண்டு மோ அதைச் செய்துள்ளது என்றார் அவர். மாஸ்கோவில் நடைபெற்ற அனைத்துலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று அதிபர் புட்டின் பேசினார். அப்போது கப்பல் பறிக்கப் பட்டது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "அவர்கள் தங்களுடைய ராணுவ கடமைகளை நிறைவேற்று கின்றனர், அதேபோல எங்க ளுடைய ரஷ்யப் படையினரும் எல்லையைக் காக்கும் கடமையை ஆற்றியிருக்கின்றனர்," என்றார்.