லயன் ஏர் விபத்து: விமானத்தை இறக்க விமானிகள் போராடினர்

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அண்மையில் விபத்துக்குள்ளான 'லயன் ஏர்' விமானம் கடலில் விழுந்து நொறுங்குவதற்கு முன் பாக விமானிகள் கடைசி நிமிடம் வரை விமானத்தை இறக்க போராடினர் என்று விசாரணை யாளர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் இறந்தனர். விமானத்தின் தானியக்க முறைக்கும் விமானிகளுக்கும் இடையே ஒரு இழுபறி போர் நடந்துள்ளது என்று அவர்கள் கூறினர். ஆனால் முன்னைய நாளில் இதே விமானத்தில் இதேபோன்ற பிரச்சினையை எதிர் நோக்கிய போது விமானிகள் கையாண்ட முறையை ஏன் இந்த விமானிகளும் கையாளவில்லை என்பது கேள்விக் குரியதாக உள்ளது என்று விசார ணையாளர்கள் கூறினர்.

இந்தோனீசிய தேசிய போக்கு வரத்து பாதுகாப்புக் குழு மேற் கொண்ட விசாரணையின் முதற் கட்ட அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் விமானத்தின் கடைசி கட்ட போராட்டம் குறித்து விவரிக் கப்பட்டிருந்தது. ஆனால் பல கேள்விகளுக்கு விடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. விமானத்தின் தகவல்கள் பதிவாகியுள்ள கறுப்புப் பெட்டியை மீட்டு ஆராய்ந்ததில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் பொருத்தப் பட்டிருந்த தானியக்க முறையில் விமானம் கீழ் நோக்கி பாய்ந்தபோது அதனை தங்களுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர விமானிகள் கடுமையாக போராடிய தாக தெரிவிக்கப்பட்டது. விமானிகளின் குரல் பதி வாகியுள்ள கறுப்புப் பெட்டி கிடைக் காத வரை விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடி யாது என்று விசாரணையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.