'மூன்று போலிஸ்காரர்களும் கொலைக் குற்றவாளிகள்'

'மூன்று போலிஸ்காரர்களும் கொலைக் குற்றவாளிகள்'

1 mins read
2da7c5fb-14f1-473a-9e35-7c3791361fb9
-

மணிலா: பிலிப்பீன்சில் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயின் போதைப் பொருளுக்கு எதிரான போரில் முதல் முறையாக இளையர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத் தில் மூன்று போலிஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. 2017ல் 17 வயது கியான் டெலோஸ் சன்டோஸை சுட்டுக் கொன்ற மூன்று போலிஸ்காரர் களுக்கும் தலா 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது.

போதைப் பொருட்களை ஒழிப் பதற்காக 2016ல் அதிபர் டுட்டர்டே போதைப் பொருளுக்கு எதிரான போரைத் தொடங்கியிருந்தார். இதில் போதைப்பொருள் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்டவர்கள் கண்ட இடத்தி லேயே விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை போதைப் பொருள் விநியோகித்த அல்லது புழங்கிய 5,000 பேர் வரை சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று காவல்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. அதிபர் டுட்டர்டேயின் நடவடிக்கையை மனித உரிமை குழுக்கள் கடுமையாக விமர்சித் திருந்தன.

இந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரோல்டோல்ஃபோ அசுசெனா, 'முதலில் சுடு, பின்னர் சிந்திக்கலாம்' என்ற மனப் போக்கில் மூன்று போலிஸ்காரர் களும் செயல்பட்டுள்ளதாகக் கூறி னார். இத்தகைய செயல்கள் நாகரிகமான சமூகத்தில் நடை பெறாது என்றும் அவர் சொன்னார். "சட்டத்தை அமலாக்கும் பணியில் மரணத்தை விளைவிப் பதற்கும் கொலை செய்வதற்கும் இடமில்லை," என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.