யுஎஸ் அறிக்கையை புறக்கணித்த சீனா

யுஎஸ் அறிக்கையை புறக்கணித்த சீனா

1 mins read

பெய்ஜிங்: உலகின் ஜனநாயக பண்புகளை கீழறுக்கும் வகையில் சீனா தனது செல்வாக்கை நாளுக்கு நாள் விரிவாக்கி வரு கிறது. இதனால் அந்நாட்டுடன் அமெரிக்கா பழிக்குப் பழி நட வடிக்கையில் ஈடுபட்டு பதிலடி தர வேண்டும் என்று சில நாட் களுக்கு முன்பு அமெரிக்க கல்விமான்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதனை சீனா புறக்கணித்துள்ளது. சென்ற வியாழக்கிழமை யுஎஸ் ஹூவர் ஆய்வுக் கழகம் வெளியிட்ட 213 பக்க அறிக் கையில் அண்மைய ஆண்டு களாக முதலீடுகளையும் உலக அளவில் செல்வாக்கை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் சீனா அதிவேகத்தில் ஈடுபட்டு வரு வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை நியூயார்க் கின் ஆசிய சமூகம் என்ற அமைப்பின் அமெரிக்க-சீன உறவு நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ஓர்விலே ஷெல் உட்பட 30 பிரபல கல்வி மான்கள் தயாரித்திருந்தனர். இந்நிலையில் சீனாவின் உண்மையான நோக் கத்தை யுஎஸ் கல்விமான்களின் அறிக்கை பிரதிபலிக்கவில்லை என்று சீன ஊடகத்தின் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.