ஜி20: உலகத் தலைவர்கள் அர்ஜெண்டினாவுக்கு வருகை

ஜி20: உலகத் தலைவர்கள் அர்ஜெண்டினாவுக்கு வருகை

1 mins read
ce4242ee-4da8-4a3d-ad99-465170de7220
-

பியூனஸ் அய்ரஸ்: உலகம் முழு வதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஜி20' உச்சநிலை மாநாடு அர் ஜெண்டினாவில் உள்ள பியூனஸ் அய்ரஸ் நகரில் நடைபெறுகிறது. இதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங் உட்பட ஜி20 தலை வர்கள் அர்ஜெண்டினாவுக்கு வரு கையளிக்கின்றனர். அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையே வர்த்தக பூசல் நிலவும் வேளையிலும் உக்ரேனிய கப்பல்களை ரஷ்யா பறித்துள்ள சூழ்நிலையிலும் வார இறுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டபோது உலகின் பெரிய பொருளியல் நாடுகளின் தலைவர்களை ஒன்று கூட்டிய முதல் சந்திப்புக்குப் பிறகு இவ்வாண்டு 10வது முறையாக 'ஜி20' உச்சநிலை மாநாடு நடைபெறு கிறது. அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக இவ்வாண்டு தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா வில் 'ஜி20' மாநாடு நடத்தப்படு கிறது. உலகளாவிய மாநாட்டில் எதிர் காலப் பணிகள், மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், தாக்குப் பிடிக்கும் எதிர்கால உணவு போன்றவை பற்றி விவாதிக்கப் படவிருக்கிறது. அர்ஜெண்டினாவுக்கு தலை வர்கள் வருகையளிக்கும் வேளை யில் தீர்க்கப்படாத பிரச்சினை களின் அறிகுறிகளும் தென்பட தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை பிற்பகல் டுவிட்டரில் தகவல் வெளியிட்ட அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்கும் திட்டத்தைக் கைவிடு வதாக அறிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் அர் ஜெண்டினா அதிபர் மொரிசியோ மேக்ரி. படம்: ஏஎஃப்பி