பியூனஸ் அய்ரஸ்: பல்வேறு பூசல் களுக்கு இடையே உலகத் தலை வர்கள் தென்னமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் ஒன்றுகூடினர். அ மெ ரி க் கா = மெ க் ஸி கோ அகதிகள் பிரச்சினை, அமெரிக்கா =சீனா வர்த்தகப் பூசல், செய்தி யாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக சவூதி அரேபியா மீதான குற்றச்சாட்டு, ரஷ்யா=உக் ரேன் பதற்றம், பிரிட்டனின் பிரெக் ஸிட் ஆகிய விவகாரங்கள் அனைத்துலகைக் கவர்ந்துள்ள நிலையில் ஜி20 உச்சநிலை மாநாடு முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஜி20 அமைப்பில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை வகிக்கும் நாடுகள் அங்கம் வகிக் கின்றன. மேலும் உலகப் பொருளி யலில் ஆதிக்கம் செலுத்தும் 20 பெரிய நாடுகள் நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்புக்கிடையே அர் ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் ஒன்றுகூடின. நேற்றுடன் முடிவடைந்த இந்த இரு நாள் மாநாட்டில் பங்கேற்க வியாழக்கிழமையே தலைவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங் கினர்.
மாநாட்டின் தொடக்கமாக ஜி20 உறுப்பு நாடுகளின் தலை வர்கள் கூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கைகுலுக்கி வரவேற்றனர். தொடக்க விழாவில் பேசிய அர் ஜெண்டினா அதிபர் மௌரிசியோ மேக்ரி, அனைத்துலகத் தலைவர் கள் பல்வேறு விவகாரங்களில் தங்களிடையே கொண்டுள்ள கருத்துவேறுபாடுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது என்றும் பிரச்சி னைகளுக்கு மாநாடு நல்லதொரு தீர்வைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இருந்தபோதிலும் எல்லாத் தலைவர்களும் பூசலை மறந்து வெளிப்படையாக நடந்துகொண்டதாகத் தெரியவில்லை.

