கட்டடங்களை குலுக்கிய அலாஸ்கா நிலநடுக்கம்: வீதிகளுக்கு ஓடிய மக்கள்

கட்டடங்களை குலுக்கிய அலாஸ்கா நிலநடுக்கம்: வீதிகளுக்கு ஓடிய மக்கள்

1 mins read
8a000faa-7198-4ef8-af32-005dee5d607a
-

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் வெள்ளிக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கின. மாநிலத்தின் ஆகப் பெரிய நகரமான ஆங்கரேஜை சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை 1.29 மணிக்கு 7.0 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது. ஆங்கரேஜில் காலை 8.29 மணி என்பதால் பள்ளிக்கூடங் களுக்கும் அலுவலகத்திற்கும் சென்றுகொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கட்டடங்களிலிருந்து கண் ணாடி பாகங்கள் உடைந்து விழுந் ததில் பலர் காயமடைந்தனர். இருப்பினும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அரசாங்க ஊடகம் தெரிவித்தது. கட்டடங்கள் பலமாகக் குலுங் கியதால் வீடுகளிலிருந்தும் அலுவ லகங்களிலிருந்தும் பொதுமக்கள் வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

பெருத்த உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுவிட்டதாகவும் ஏராளமான வீடுகளும் கட்டடங்களும் சேத மடைந்ததாகவும் போலிசார் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள் ளனர். பல இடங்களில் சாலைகளும் பாலங்களும் மூடப்பட்டுவிட்டதால் பயணம் செய்வோர் பாதுகாப்புக்காக சாலை ஓரம் ஒதுங்குமாறு ஆங் கரேஜ் மக்களை போலிசார் கேட்டுக்கொண்டனர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பின்னர் 7,000 முதல் 10,000 வரையிலான மக்கள் இருட்டில் தவித்ததாகச் செய்திகள் தெரிவித்தன. சுனாமி அறிவிப்பு விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டது.

7.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் சாலைகள் பிளந்தன. நாலாபுறமும் சேதமடைந்த சாலைகளின் நடுவே மாட்டிக்கொண்ட கார். படம்: ஏஎஃப்பி