கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்று மலேசிய சீனர் சங்கம் விரும்புவதாக அக்கட்சியின் தலைவர் வீ கா சியோங் கூறினார். ஆரம்பத்தில் அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மஇகா ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்தன. பின்னர் மேலும் நான்கு கட்சிகள் அக்கூட்டணியில் சேர்ந்ததைத் தொடர்ந்து தேசிய முன்னணி கூட்டணி உருவானது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அக் கூட்டணியில் 3 கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில் வீ இவ்வாறு கூறியுள்ளார்.
'தேசிய முன்னணி கலைக்கப்பட வேண்டும்'
1 mins read

