கோலாலம்பூர்: மலேசியாவின் சுபாங் ஜெயாவில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் தொடர்பில் மலேசிய போலிசார் விசார ணையைத் தொடங்கியுள்ளனர். ஆலயக் கலவரத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவிய செய்திகளை அடுத்து போலிசாருக்கு நான்கு புகார்கள் வந்ததாக சிலாங்கூர் போலிஸ் படைத் தலைவர் மஸ்லான் மன்சூர் தெரிவித்தார். அந்த நான்கு புகார்களின் பேரில் சீர்குலைவு சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கியிருப்பதாக அவர் சொன்னார். வலைப்பதிவாளரான வான் முகம்மது அஸ்ரி வான் டெரிஸ் நேற்று மதியம் 1 மணிக்கு, செப்பாங் போலிஸ் தலைமை அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் திரு மஸ்லான் மன்சூர் கூறினார். அத்துடன் நாட்டில் பல இன மக்களின் ஒற்றுமையைக் சீர்குலைக்க விரும்பும் அல்லது தீங்கிழைக்கும் நோக்கோடு செயல்படும் எந்தவொரு தரப் பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மஸ்லான் நினைவுபடுத்தினார்.
கோயில் கலவரம்: விசாரணையை தொடங்கியது மலேசிய போலிஸ்
1 mins read

