ஜோகூர் அரசி: இனங்களுக்கு இடையே சகிப்புத்தன்மை இல்லாதது கவலை தருகிறது

ஜோகூர் அரசி: இனங்களுக்கு இடையே சகிப்புத்தன்மை இல்லாதது கவலை தருகிறது

2 mins read
9ce77183-8c7c-4bb2-abdd-dbcb2909a377
-

கோலாலம்பூர்: மலேசியாவில் பல்வேறு இனத்தவர்களிடம் நிலவும் சகிப்புத்தன்மை இல்லாமை யும் கருத்து வேறுபாடும் தமக்கு வருத்தம் அளிப்பதாக ஜோகூர் அரசியார் ராஜா ஸரித் சோஃபியா கூறியுள்ளார். சுபாங் ஜெயா சீஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த அசம்பாவித சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் வேறுபாடுகள் கவலை அளிப்பதாக அவர் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய நண்பர்கள் பலருடன் தங்கள் குடும்பத்திற்கு இருந்த அணுக்கமான உறவு பற்றியும் அவர் ஃபேஸ்புக் பக்கத் தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"சுபாங் ஜெயாவில் உள்ள ஓர் இந்துக் கோயிலில் நடந்த கலவரத்தில் மக்களும் தீயணைப்பு வீரர் ஒருவரும் தாக்கப்பட்டதை அடுத்து நாட்டில் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க எனது இந்திய நண்பர்கள் எல்லோரும் நினைவுக்கு வருகின் றனர். அவர்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள்," என்று அரசியார் கூறியுள்ளார். குடும்ப மருத்துவர்களான சுப்பிரமணியம் பாலன் மற்றும் சிங்காரவேலுவை அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

மறைந்த தன் மகன் துங்கு அப்துல் ஜலிலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இவ்விருவரும்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் டிசம்பர் 5ம் தேதி வந்தால் மகன் துங்கு அப்துல் ஜலில் மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன என்று அவர் கூறினார். ஜலிலுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதும் இவ்விரு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறவே தன் மகன் விரும்பிய தாகவும் அரசியார் கூறினார். "பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோது இந்திய நண்பர் மோகன் அவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தார். பல விளை யாட்டுகளையும் அவர் கற்றுக் கொடுத்தார்," என்று கூறிய அரசியார் தம்முடன் பழகிய இந்திய நண்பர்களை நினைவு கூர்ந்தார்.

ஜோகூர் அரசியார் ராஜா ஸரித் சோஃபியாவும் அவரது பிள்ளைகளும் மோகன் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அரசி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.