பாரிஸ்: ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் விரைவில் பேச்சு

பாரிஸ்: ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் விரைவில் பேச்சு

04 Dec 2018 - 9:17 am

1 mins read

பாரிஸ்: பிரான்சில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நீடிக்கும் வேளையில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரெஞ்சு அதிபர் இமானுவல் மேக்ரோன் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அரசியல் தலைவர்களுடனும் ஆர்ப்பாட்டக் காரர்களுடனும் பேச்சு நடத்துமாறு அந்நாட்டு பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்கால ஆர்ப்பாட்டங் களைச் சமாளிக்க பாதுகாப்புப் படையினரை ஆயத்தப்படுத்துமாறு உள்துறை அமைச்சரை மேக்ரோன் கேட்டுக்கொண்டதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

பிரான்சில் நீடிக்கும் போராட்டங்கள் முடிவுக்குவர ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உட னடியாக சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இருப்பினும் இதுபற்றி அதிபர் எதுவும் கூற வில்லை. நாட்டில் அவசர நிலை அறி விக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்த நிலையில் அதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை என அமைச்சர்கள் கூறியுள்ளனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் சனிக்கிழமை தொடங்கிய போராட் டம் வன்முறை ஆர்ப்பாட்டமாக வெடித்தது. பாரிஸ் நகரில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மோசமான கலவரம் அது என்று கூறப்படுகிறது.

பாரிஸ் நகரில் தேசிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்: படம்: ராய்ட்டர்ஸ்