ஆகாயத்தில் விமானங்கள் மோதல்: 5 அமெரிக்க வீரர்களைக் காணோம்

ஆகாயத்தில் விமானங்கள் மோதல்: 5 அமெரிக்க வீரர்களைக் காணோம்

2 mins read
f8a9af4b-0275-44bb-b08f-5b913ec78f0b
-

அமெரிக்காவின் இரண்டு போர் விமானங் கள், நேற்று பசிபிக் பெருங்கடலில் ஜப்பானின் தென்மேற்குக் கடற்கரைக்கு அருகே ஆகாயத்தில் மோதிக்கொண் டதை அடுத்து ஐந்து வீரர்களைக் காண வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியினர், இரண்டு பேரை மீட்டனர். இதர ஐந்து பேரைத் தேடும் பணி தீவிரமாக நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு ஜப்பானில் இருக் கும் ஹிரோ‌ஷிமாவிற்கு அருகே உள்ள இவாகுனி தளத்திலிருந்து F/A-18 போர் விமானமும் KC-130 எண்ணெய் விமான மும் மேலே கிளம்பி வழக்கமான ஆகாயத் தில் எண்ணெய் நிரப்பும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு விமானங் களும் மோதிக்கொண்டுவிட்டன என்று அமெரிக்க கடல் துறையைச் சேர்ந்த வீரர்கள் தெரிவித்தனர்.

மோதிக்கொண்ட விமானங்கள் கட லில் விழுந்துவிட்டன. எண்ணெய் நிரப்பியபோது ஏதாவது பிரச்சினை ஏற் பட்டு இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த இரண்டு விமானங்களில் இருந்த ஏழு வீரர்களில் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுவிட்டதாக ஜப்பானின் தற் காப்பு அமைச்சு அறிவித்தது-. அந்த இருவரில் ஒருவரின் நிலைமை சீராக இருப்பதாகவும் மற்றொருவர் விபத்து நிகழ்ந்து 10 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டது. மீட்கப்பட்ட இரண்டாவது வீரர் பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். காணாமல் போய்விட்ட ஐவரை மீட்க முயற்சிகள் தொடர்வதாகவும் ஜப்பானிய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ ஆகாய விபத்துகள் அதிகரித்து இருக்கின்றன என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கும் வேளையில், இந்தப் புதிய விபத்து நிகழ்ந்து இருக்கிறது. கடந்த 2013 முதல் 2017 வரைப்பட்ட நிதி ஆண்டுகளில் அமெரிக்காவின் விமான விபத்துகள் ஏறக்குறைய 40% அதிகரித்து இருப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மிலிட்டரி டைம்ஸ் தெரி வித்தது. அந்த விபத்துகளில் குறைந்தபட்சம் 133 சேவையாளர்கள் மாண்டுவிட்டார்கள். இந்த அளவுக்கு விபத்துகள் நிகழ்ந்ததை அடுத்து இந்தப் பிரச்சினையை ஒரு நெருக்கடி என்று அமெரிக்க நாடாளு மன்றத் தலைவர்கள் வர்ணித்துள்ளனர். போதிய பயிற்சி இல்லை. சாதனங்கள் பழமையடைகின்றன. நவீனமயமாக்கும் திட்டங்கள் ஒத்திபோடப்படுகின்றன. இவை காரணமாகவே அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.