பெட்டாலிங் ஜெயா: குக்குப் தீவின் தேசிய பூங்கா எனும் தகுதி நீக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று கூடிய ஜோகூர் சட்டமன்றத்தில் குக்குப் தீவின் தேசிய பூங்கா தகுதி ரத்து செய்யப் பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவசர தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. செங்காராங் சட்டமன்ற உறுப்பினர் கைருடீன் ஏ. ரஹிம் முன்மொழிந்த தீர்மானத்துக்கு அனைத்து பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். ஆனால் தீர்மானத்துக்கு தேசிய முன்னணி ஆதரவு வழங்கவில்லை. குக்குப் தீவுக்கு தேசிய பூங்கா எனும் தகுதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று திரு கைரூடின் வலியுறுத் தினார்.
குக்குப் தீவு தேசிய பூங்கா
1 mins read

