ஹுவாவெய் நிறுவனரின் மகள் கைது

ஹுவாவெய் நிறுவனரின் மகள் கைது

1 mins read
44af0b88-c010-472f-83c6-d14b6ab2b1e2
-

மெங் வான்ஷோவ். கோப்புப் படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: சீனாவில் பிரபல கைத்தொலைபேசி நிறுவனமான ஹுவாவெய்யைத் தோற்று வித்தவரின் மகள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் தடையை மீறி செயல்பட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் அறிந்த வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எத்தகைய மீறல் என்பது பற்றி தெரியவில்லை. ஹுவாவெய்யை நிறுவிய ரென் ஷென்ஃபய்யின் மகளான மெங் வான்ஷோவ் நிறுவனத்தில் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் தலைமை நிதி அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். அர்ஜெண்டினாவில் 'ஜி20' மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசிய அதே டிசம்பர் 1ஆம் தேதி மெங் வான்ஷோவ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் இன்று அவர் நிறுத்தப்படுவார் என்று கனடா நீதித் துறையின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.