'போயிங் ரக விமானங்கள் பாதுகாப்பானவை'

'போயிங் ரக விமானங்கள் பாதுகாப்பானவை'

1 mins read

ஜகார்த்தா: லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதை அடுத்து அந்த விமானங் களை செலுத்தும் விமானிகள் கூடுதல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. 737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதை ரத்து செய்வது குறித்து லயன் ஏர் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் தங்கள் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்று போயிங் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டென்னிஸ் மியுலன்பர்க் கூறியுள்ளார்.