மணிலா: தெற்கு பிலிப்பீன்சில் ராணுவச் சட்டத்தை 2019 ஆம் ஆண்டு இறுதி வரை நீட்டிக்கு மாறு சட்டமன்ற உறுப்பினர்களை பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே கேட்டுக்கொண்டுள்ளார். ராணுவச் சட்டத்தை நீட்டிக்கும் நடவடிக்கை மனித உரிமை களுக்கு மிரட்டலாக விளங்கும் என்றும் அத்தகைய நடவடிக்கை அதிபருக்கு கூடுதல் அதி காரத்தை வழங்குவதால் அது குறித்து கவலைப்படுவதாகவும் பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் தெற்கு பிலிப்பீன்சில் மிண்டானோ பகுதி யில் மக்களைப் பாதுகாக்க ராணுவச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அதிபர் விரும்பு வதாக அதிபரின் பேச்சாளர் கூறியுள்ளார்.
ராணுவச் சட்டத்தை நீட்டிக்க விரும்பும் பிலிப்பீன்ஸ் அதிபர்
1 mins read

