கொலம்பியாவில் அரசாங்கம் அண்மையில் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல நாட்களாக ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி குறைப்பு, வரி சீர்திருத்த நடவடிக்கை உட்பட பல்வேறு திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் தொழிற்சங்க ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பகோட்டா நகரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி
கொலம்பியாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
1 mins read
-

