தென்கொரிய புல்லட் ரயில் தடம் புரண்டது

1 mins read

சோல்: தென்கொரியாவில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மொத்தம் 198 பயணிகளுடன் காங்நியுங் நகரிலிருந்து சோல் நகருக்கு புறப்பட்ட புல்லட் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தடம் புரண்டதாகக் கூறப்பட்டது. ரயில் தடம் புரண்டதில் சுமார் 14 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.