வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது முக்கிய உதவியாளரான ஜான் கெல்லி இவ்வாண்டு இறுதியில் பதவி விலகுகிறார் என்று அறிவித்துள் ளார். ஜான் கெல்லியைப் பதவியி லிருந்து அகற்றுவதற்காக அவருக்கு தொடர்ந்து நெருக்கடி யளிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளி யாயின. இந்த நிலையில் திரு ஜான் கெல்லி பதவி விலகும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பேசிய அதிபர் டிரம்ப், திரு கெல்லி சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டார். சில நாட்களில் அவருக்கு மாற்றாக புதியவர் ஒருவரின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். "இரண்டு வகையான பொறுப் பில் அவர் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக என்னுடன் பணி யாற்றி வந்தார். "அவரது சேவையை மிகவும் பாராட்டுகிறேன்," என்றார் அதிபர் டோனல்ட் டிரம்ப்.
திரு ஜான் கெல்லியுடன் ஆலோசனை நடத்தும் அதிபர் டிரம்ப். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

